Sunday, February 8, 2026
Your AD Here

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறும்!

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினால் அரசாங்கமும் இல்லாதொழியும், நாடும் பாதிக்கப்படும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை மீளப் பெற்றுக் கொண்டுள்ளமை சிறந்த தீர்மானமாகும்.

அரச பாதுகாப்பினைப் பெறுவதாயின் ஒன்று மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும் அல்லது உயிரச்சுறுத்தல் ஏதும் காணப்பட வேண்டும்.

நாங்கள் தற்போது மக்கள் பிரதிநிதிகள் அல்ல ஆகவே விசேட பாதுகாப்பு அவசியமற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் அரசியலுக்குப் பிரவேசிப்பதற்கு முன்னர் வகித்த அரச உயர் பதவிகளைத் துறந்துள்ளார்கள்.

அவர்களால் இனி அரச சேவையில் இணைய முடியாது. ஆகவே ஓய்யூதியக் கொடுப்பனவு தொடர்பில் எடுத்துள்ள தீர்மானத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

சஜித் – ரணில் மற்றும் அவர்களை நம்பியுள்ள தரப்பினர் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் படுதோல்வியடைவார்கள்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அரசியலில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள்.

இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறும். மக்கள் எளிய பெரும்பான்மையை ஜனாதிபதிக்கு வழங்க வேண்டும்.

ஏனெனில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினால் அரசாங்கமும், நாடும் இல்லாதொழியும்.

முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர் ஜயவர்தன, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான பாராளுமன்றத்தை வழங்கினார்கள்.

இறுதியில் அரசாங்கத்திற்குப் பாரிய நெருக்கடிகளே தோற்றம் பெற்றன. ஆகவே எந்த அரசாங்கத்துக்கும் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இனி வழங்கக் கூடாது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்