Sunday, February 8, 2026
Your AD Here

தேர்தல் ஆணையத்தின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்கிறோம்! -அமைச்சர் விஜித.

25,000 ரூபா உர மானியத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த தீர்மானத்துக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“இது தேர்தல் காலம் என்பதால், தேர்தல் ஆணையம் இடைநிறுத்தக் கூறியது. தேர்தல் ஆணையத்தின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதன்படி செயற்படுவோம்.”

செப்டெம்பர் 26ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஹெக்டேயருக்கு 15,000 ரூபா உர மானியத்தை எதிர்வரும் பருவத்தில் 25,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்தார்.

ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய மானியங்களை வழங்குவதன் மூலம் ஒரு தரப்பினர் பயனடையலாம் என்பதால், மானியம் வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேர்தலுக்குப் பின்னர் உரிய பிரேரணையை நடைமுறைப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உரிய நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தேசிய அமைப்பு ஒன்று ஒன்றிணைந்து தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.

தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு எதிர்வரும் பருவத்துக்கான உர மானியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க நேரிடும் என விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்