Sunday, February 8, 2026
Your AD Here

மூடிக்கிடக்கும் ஜனாதிபதி அநுரவின் தாயாரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பாம்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தாயார் வாழ்ந்த வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ்.குமாரசிறி தெரிவித்துள்ளார்.

தற்போது வீடு பூட்டியே கிடக்கிறது, ஆனால் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை நீக்கி காலி முகத்திடலில் வாகனங்களை காட்சிப்படுத்துவது அரசியல் நிகழ்ச்சி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் ரீதியாக எவராலும் தமக்கு அச்சுறுத்தல் இல்லையென்றாலும், பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதாகத் தெரிவித்த அவர், அவர்களின் உயிரின் பாதுகாப்புக்கு அரசாங்கம் முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்