Monday, February 9, 2026
Your AD Here

நாட்டில் கடந்த 8 மாதங்களில் 239 யானைகள் உயிரிழந்துள்ளன…

2024 ஆம் ஆண்டின் கடந்த 8 மாதங்களில் 239 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 40 யானைகளும், மின்சாரம் தாக்கி 31 யானைகளும், ரயிலில் மோதி 5 யானைகளும், வீதி விபத்துக்களில் சிக்கி 6 யானைகளும், நீரில் மூழ்கி 11 யானைகளும், ஏனைய விபத்துக்கள் தொடர்பில் 7 யானைகளும் உயிரிழந்துள்ளது.

இளம் வயதுடைய யானைகளே அதிகளவில் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் யானைகளின் தாக்குதல்களினால் 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் 488 யானைகள் உயிரிழந்துள்ள நிலையில், யானைகளின் தாக்குதல்களினால் 184 மனித உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்