..வரும்போது பொதுத் தேர்தலின் ஊடாக நாட்டு மக்களின் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தீர்க்கப்பட வேண்டும். அது வெறுமனே பேச்சுக்கு மட்டுப்படுத்தப்படாமல் களத்தில் யதார்த்தமான ஒன்றாக அமைந்து காணப்பட வேண்டும்.
நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய உகந்த தீர்வுகள் மக்கள் சார்பான தீர்வுகளாக அமைய வேண்டும். மேலும், உள்ளோர் இல்லாதோர் இடைவெளியைப் போக்கக்கூடிய, சொந்தக் காலில் நிற்கக்கூடிய பெருமைக்குரிய தலைமுறையை உருவாக்கி, அனைத்து மக்களையும் உள்வாங்கிய அபிவிருத்தி யுகத்தை உருவாக்கித் தருவோம். இது ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைநோக்கு ‘ என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.





