Monday, February 9, 2026
Your AD Here

உயிரிழந்த மகனின் பரீட்சை பெறுபேறுகளைப் பார்த்து மாரடைப்பால் தந்தை மரணம்.

உயிரிழந்த மகனின் பரீட்சை பெறுபேற்றை பார்த்து தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு பாடசாலையில் கல்வி கற்ற மாணவன் ஒருவன் கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதி இரண்டு நாட்களின் பின் உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்குக்குச் சென்று கொண்டிருந்த போது காரில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியிருந்த நிலையில், உயிரிழந்த மாணவனின் பரீட்சை பெறுபேறுகளை பார்த்த தந்தை மகன் பரீட்சையில் சித்தியடைந்தும் உயிரோடு இல்லை என்ற அதிர்ச்சியில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்