Sunday, April 19, 2026
Your AD Here

துப்பாக்கிகளை கையளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு !

தற்காப்புக்காக பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சகல விதமான துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் தற்காலிகமாக மீண்டும் பெற்றுக் கொள்வதற்குப் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

பரிசீலனை நடவடிக்கைகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான தேவைப்பாடு என்பன குறித்து ஆராய்ந்ததன் பின்னர் துப்பாக்கிகள் அந்தந்த நபர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, உரிமம் பெற்ற துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்காக வழங்கப்படும் தோட்டாக்கள் என்பவற்றை எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் டி வெலிசர பகுதியில் உள்ள இலங்கை கடற்படையின் அரச வெடிமருந்து களஞ்சியசாலையில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த திகதிக்கு முன்னர் துப்பாக்கிகளை ஒப்படைக்கத் தவறுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்