Monday, February 9, 2026
Your AD Here

3 முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட 35 முன்னாள் அமைச்சர்கள் பொதுத் தேர்தலில் இல்லை!

35க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இவர்களில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்க்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அடங்குவர்.

ஏனைய அமைச்சர்களில் சுமார் ஐந்து முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 10 முன்னாள் இராஜாங்க அமைச்சர்களும் சுமார் 25 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது நண்பர்களை அழைத்து கலந்துரையாடியதன் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதுமட்டுமின்றி எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் குழு ஒன்று கட்சி மாறி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரியவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்