Monday, February 9, 2026
Your AD Here

7 பேரின் சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை!

அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் உட்பட ஏழு பேரின் சொத்துக்களை முடக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது.

அவர்கள் சொத்துக்கள், வங்கி கணக்குகள், காப்பீட்டு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.

இவர்களால் பெறப்படும் சம்பளத்தில் வாங்க முடியாத அளவுக்கு சொத்துக்களை எப்படி. கொள்வனவு செய்தனர் என்பது குறித்து ஆணைக்குழு மேலும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்தச் சொத்துக்கள் தங்கள் குடும்ப பரம்பரை மற்றும் உறவினர்களிடம் இருந்து வந்ததாக கூறினாலும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அந்தக் கூற்றுகள் பொய்யானது என தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்