Monday, February 9, 2026
Your AD Here

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு; பொலிஸாரின் அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 50 அதிகாரிகள் உட்பட பாதுகாப்பு தரப்பினர் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவார்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை விரைவில் தீர்மானிக்கப்பட்டு வரையறை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை ஸ்தாபிப்பதற்கு தேவையான அதிகாரிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்