Monday, February 9, 2026
Your AD Here

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும்..

இங்கு கருத்தி தெரிவித்த கொழும்பு பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்த போதும் அதற்கான நியாயம் கிடைக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கங்களினால் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டாலும் பிரச்சினைக்கு காரணம் என்னவென்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீது நம்பிக்கை உள்ளதெனவும், அவரின் நேர்மையை பாராட்டுவதாகவும் தெரிவித்த கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அந்த நேர்மையை மக்கள் மத்தியில் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுவார் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், அதன்படி ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவார் என்ற நம்பிக்கையும் கொண்டிருப்பதாக மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கட்டுவாப்பிட்டிய தேவாலய பொறுப்பாளர் அருட்தந்தை மஞ்சுள நிரோஷன் மற்றும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களும் பெருமளவில் கலந்துகொண்டிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்