இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஆறுமுகம் சிவலிங்கம், உப தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
தன்னுடைய ராஜினாமாக் கடிதத்தை அக்கட்சியின் தலைமைப் பீடத்திற்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.





