Monday, February 9, 2026
Your AD Here

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பயன்படுத்தப்படாத முத்திரைகள் இரத்து.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடாந்தம் வழங்கப்படும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான முத்திரைகளில் பயன்படுத்தப்படாதவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது.

வருடாந்தம் வழங்கப்படும் இலவச முத்திரைகளில் எஞ்சியவற்றை அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் அல்லது பாராளுமன்றத்தில் ஒப்படைக்குமாறு தபால் திணைக்களம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, இம்முத்திரைகளைப் பயன்படுத்துவதற்கு தடையென, தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, பயன்படுத்தப்படாத முத்திரைகளை பாராளுமன்ற தபால் அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு, தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.

குறித்த முத்திரைகளை செல்லுபடியற்றவையாக கருதப்பட வேண்டுமென, நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களுக்கும் தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்