Monday, February 9, 2026
Your AD Here

35 வயது மாமியை , 16 பேர் கொண்ட குழுவுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன்…

களுவாஞ்சிக்குடியில் 16 பேர் கொண்ட குழுவுடன் சென்ற மருமகன் மாமியாரை பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு 35 பவுண் தங்க நகைகள் பணத்தை திருடிவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

தனிமையில் இருந்த 35 வயதுடைய மாமியாரின் வீட்டை 16 பேர் கொண்ட குழுவுடன் சென்று மருமகன் வீட்டை உடைத்து மாமியாரை பலாத்காரம் செய்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளான்.

பின் அவரின் 35 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்தாக பொலிசார் தெரிவித்தனர்

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெணின் கணவர் இல்லாத நிலையில் தனது 19 வயது மகள் திருமணம் முடித்து வேறு இடத்தில் தங்கி வாழ்ந்து வருகின்றதுடன் தாயார் தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வருகின்றார் என தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தமைக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பெண் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்