Tuesday, February 10, 2026
Your AD Here

பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ வெளியிட்டுள்ள முக்கியத் தகவல்!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு நிலவுகின்ற அச்சுறுத்தல் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக விசேடக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எந்தவித மாற்றமும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். இந்தநிலையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு தற்போது அதன் பணிகளை ஆரம்பித்துள்ளது.

எனவே, அந்த குழுவினால் வழங்கப்படும் மதிப்பீட்டு முடிவுகளுக்கமைய, அச்சுறுத்தலின் தன்மைக்கு ஏற்ப, முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்புக்காக நியமிக்கப்படும் அதிகாரிகளின் எண்ணிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனக் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்