Tuesday, February 10, 2026
Your AD Here

ஈஸ்டர் தாக்குதல்: மீண்டும் நவம்பர் 18 இல் விசாரணை உச்ச நீதிமன்றம் நேற்று தீர்மானம்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய வழக்கை எதிர்வரும் நவம்பர் 18 இல், மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தாக்குதல் பற்றி, ஏற்கனவே புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும் அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காதமை குறித்து நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கே நவம்பர் 18 இல், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதற்கான உத்தரவை நேற்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த வழக்குத் தொடர்பான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் இடம்பெற்றது.இதன்போது, அடிப்படை உரிமை மனுவின் படி முழுமையான நட்ட ஈட்டை செலுத்தி முடித்துள்ளதாக, அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன அவரது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

நட்ட ஈட்டை முழுமையாக செலுத்தி யுள்ளமை தொடர்பில் எழுத்து மூல ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அறிவித்ததையடுத்து நிலந்த ஜயவர்தனவின் சட்டத்தரணி அதனை நேற்று பிற்பகல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இதன் போது சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சொலிசிட்டர் ஜெனரல் தெரிவிக்கையில், நேற்றைய தினம் பிரதிவாதியால் 65 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அலுவலகம் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேற்படி நட்ட ஈட்டை வழங்க தாமதமாகியமை தொடர்பில், நீதிமன்றத்திடம் தாம் மன்னிப்பு கோருவதாகவும் நிலந்த ஜயவர்தன சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத் தரணிகள் தெரிவித்தனர்.

அதனையடுத்து மேற்படி வழக்கை மீண்டும் நவம்பர் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்