Tuesday, February 10, 2026
Your AD Here

பேரம் பேசும் சக்தியாக வருவோம்- முன்னாள் எம்.பி. திலீபன்

“மக்கள் ஆணையை பெற்று பேரம் பேசும் சக்தியாக வருவோம்” என, ஈ.பி.டி.பி. கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் பணிமனையில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாராளுமன்ற தேர்தலுக்கான எமது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்து மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வன்னி மட்டுமன்றி யாழ்ப்பாணம், கிழக்கு மாகாணம், கொழும்பு ஆகிய இடங்களிலும் போட்டியிட்டு மக்களின் ஆணையை பெற்று தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான எமது கட்சி பேரம் பேசும் சக்தியாக வருவோம்.

வன்னியில் இரண்டு ஆசனங்களையும், யாழில் மூன்று ஆசனங்களையும் பெறக்கூடிய நிலை இருக்கின்றது” எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்