Tuesday, February 10, 2026
Your AD Here

பதுளை, எல்ல ஒன்பது வளைவுகள் பிரதேசம் தற்காலிகமாக மூடப்படவுள்ளது!

மலையகத் தொடரூந்து பாதையின் பதுளை, எல்ல ஒன்பது வளைவுகள் பிரதேசம் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

அதன் பிரகாரம் இன்று தொடக்கம் எதி்ர்வரும் 15ம் திகதி வரை எல்ல தொடக்கம் பதுளை வரையான தொடரூந்துப் பாதை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

இந்திய சினிமாப் படப்பிடிப்பு ஒன்றிற்காகவே இவ்வாறு தொடரூந்துப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தொடரூந்துப் பாதை தற்காலிகமாக மூடப்படும் நாட்களில் கொழும்பு – பதுளை தொடரூந்துகள் கொழும்பில் இருந்து எல்ல தொடரூந்து நிலையம் வரை மட்டுமே பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை – கொழும்பு தொடரூந்துகளும் எல்ல தொடரூந்து நிலையத்தில் இருந்தே புறப்படும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்