பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி முர்து நிரூபா பிதுஷினீ பெர்னான்டோ இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பட்டதாரியான அவர் 1985ம் ஆண்டில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்தார்.
1997ம் ஆண்டு அவர் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும் 2014ம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி உயர்வுப் பெற்றார். பதில் பிரதம நீதியரசரான முர்து நிரூபா பிதுஷினீ பெர்னான்டோ மொரட்டுவை கல்லூரியின் பழைய மாணவியாவார்.





