அரசாங்க பகுப்பாய்வாளராக சந்தியா குமுதினி ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க பகுப்பாய்வாளர் பதவியில் கடமையாற்றிய திருமதி. தீபிகா செனவிரத்ன 2024.10.11 திகதியிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
அதற்கமைய, வெற்றிடமாக உள்ள மேற்குறித்த பதவிக்கு இலங்கை விஞ்ஞான சேவையின் விசேட தர அலுவலர்களிலிருந்து சேவைமூப்பு அட்டவணைக்கு அமைய அடுத்ததாக ஆகக்கூடிய சேவைமூப்புள்ள, தற்போது அரசாங்க மேலதிக பகுப்பாய்வாளர் பதவியில் சேவையாற்றும் திருமதி. சந்தியா குமுதினி ராஜபக்ஸவை நியமிப்பதற்காக நீதி, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும் தொழில் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.






