Sunday, April 26, 2026
Your AD Here

மத்திய மகா வித்தியாலயத்தின் கட்டடத்துக்கு தீ வைப்பு: இரண்டு மாடிகளும் எரிந்து நாசம்!

மாத்தறை அக்குரஸ்ஸ கல்வி வலயத்துக்கு உட்பட்ட தெலிஜ்ஜவில மத்திய மகா வித்தியாலயத்தின் இரண்டு மாடிக் கட்டிடம் திடீர் தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

(15) மாலை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கட்டிடம் தீப்பற்றி எரிவதை கண்டு அலறியபோது பிரதேசவாசிகள் மற்றும் மாலிம்பட பொலிஸார் தீயை கட்டுப்படுத்த வந்தனர்.

ஆனால் அதற்குள் கட்டிடத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

பாடசாலை வளாகத்தில் இருந்த நாய் ஒன்றும் தீயில் சிக்கி இறந்தது.

இக்கட்டடத்தில் உள்ள விளையாட்டுப் பொருட்கள், 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மெத்தைகள், பாடசாலை மேசைகள், நாற்காலிகள், மின் உபகரணங்கள் உட்பட பல பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் (16) வந்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதுவரை வெளியாகியுள்ள உண்மைகளின் பிரகாரம், இந்த கட்டிடத்திற்கு ஏதோ ஒரு குழுவினர் தீ வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்