Thursday, February 12, 2026
Your AD Here

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த வாகனங்களில் 03 வாகனங்களைக் கையளிக்க நடவடிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த 06 உத்தியோகபூர்வ வாகனங்களில் 03 வாகனங்களை இன்று (21) கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள எழுத்துமூல பணிப்புரைக்கமைய, இன்று 21ஆம் திகதி திங்கட்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வாகனங்களில், 03 வாகனங்களைக் கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிலுள்ளதாகக் கூறப்படும் வாகனங்கள் தொடர்பான தகவல்கள் சரியான தகவலல்ல என்வும் அது உண்மைக்குப் புறம்பான தகவலெனவும் முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட எழுத்துமூல பணிப்புரையின் படி, மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட 06 உத்தியோகபூர்வ வாகனங்களில் 03 வாகனங்களைக் கையளிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த மேலதிக வாகனங்களை மீளக் கையளிக்குமாறு ஏற்கனவே ஜனாதிபதி செயலகத்தினால் பணிப்புரை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்