வங்கக் கடலில் உருவான “டானா” புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு – வட மேற்குத் திசையில் நகர்ந்து நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது மேலும் மேற்கு – வட மேற்குத் திசையில் நகர்ந்து நேற்று அதிகாலையில் “டானா” புயலாக மாறியுள்ளது.
தொடர்ந்து வடமேற்குத் திசையில் நகர்ந்து நேற்றிரவு 11.30 மணியளவில் தீவிரப் புயலாக வலுப்பெற்றது.
இந்த புயல் இந்தியாவின் ஒடிசாவிற்கு தென் கிழக்கே 330 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது.
இதைத்தொடர்ந்து வடக்கு ஒடிசா – மேற்கு வங்கக் கடற்கரைப் பகுதிகளில் பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே இன்று நள்ளிரவு தொடங்கி நாளை காலை வரை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அப்போது காற்றின் வேகம் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்திலும் வீசுக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, “டானா” புயல் ஒடிசா – மேற்கு வங்கம் இடையே நாளை அதிகாலைக்குள் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அம்மாநில முதலமைச்சர் மோகன் சரண் ஆய்வு மேற்கொண்டார்.
கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் தங்களது படகுகளைக் கயிறு கட்டிப் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்று வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் கடற்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
“டானா” புயல் காரணமாக இன்று மாலை முதல் நாளை காலை வரை 190 ரயில்களை தென் கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
இதேபோன்று புவனேஷ்வர் மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களில் இன்று மாலை முதல் நாளை காலை வரை விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.






