Thursday, February 12, 2026
Your AD Here

கொழும்புக் கோட்டையில் இருந்து காங்கேசன் துறை வரையான புகையிரத சேவை இன்று முதல் ஆரம்பம்!

மஹவ மற்றும் அனுராதபுரம் வரையான புகையிரதப் பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் கொழும்புக் கோட்டையில் இருந்து காங்கேசன் துறை வரையான புகையிரத சேவை இன்று (28) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் பிரதிப் புகையிரதப் பொதுமுகாமையாளர் (போக்குவரத்து) என்.ஜே. இந்திபொலகே விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தினமும் வடக்கு புகையிரதப் பாதையில் புகையிரதம் பயணிக்கும் என்றும், புகையிரதக் கடவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்படுமாறும் புகையிரதத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்தப் புகையிரத நேர அட்டவணைக்கு அமைய,

கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.05 க்கு புறப்படும் புகையிரதம் பிற்பகல் 12.38 க்கு திருகோணமலையைச் சென்றடையும்.

பிற்பகல் 01.30 க்கு திருகோணமலையில் இருந்து புறப்படும் புகையிரதம் இரவு 07.59 க்கு கொழும்புக் கோட்டைப் புகையிரத நிலையத்தை வந்தடையும்.

கொழும்புக் கோட்டையில் இருந்து காலை 06.05 க்கு புறப்படும் புகையிரதம் பிற்பகல் 03.15 க்கு மட்டக்களப்பைச் சென்றடையும்.

கொழும்புக் கோட்டையில் இருந்து பிற்பகல் 03.15 க்கு புறப்படும் புகையிரதம் இரவு 10.22 க்கு மட்டக்களப்பைச் சென்றடையும்.

மட்டக்களப்பில் இருந்து பிற்பகல் 01.40 புறப்படும் புகையிரதம் இரவு 08.55 க்கு கொழும்புக் கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும்.

மட்டக்களப்பில் இருந்து இரவு 06.10 க்கு புறப்படும் புகையிரதம் இரவு 08.55 க்கு கொழும்புக் கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்