மட்டக்களப்பில் இன்றைய தினம் 31/03/2025 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஸ்தாபகர் தந்தைசெல்வநாயகம் அவர்களின் பிறந்த தினம் தந்தை செல்வா திருவுருவச் சிலை வளாகத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மண்முனை வடக்கு பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் 127வது பிறந்த தின நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ ஞா.ஶ்ரீநேசன் ஐயா அவர்களும், எமது கட்சியின் பிரதேச கிளை உறுப்பினர்களும், வாலிபர்முன்னணி உறுப்பினர்களும் கலந்துகொண்டு மலர் மாலை அணிவித்து தீபச்சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.

















