Monday, September 8, 2025
Your AD Here

பழுதடைந்த பழ விற்பனை அதிகரிப்பு-அம்பாறையில் சம்பவம்.

பழுதடைந்த பழ விற்பனை காரணமாக நுகர்வோர் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது ,காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, சுகாதார வைத்திய அதிகாரி   பிரிவுகளில்  பழங்கள்  விற்பனை செய்யும் நிலையங்களில் இவ்வாறு பழுதடைந்த  பழ வகைகள் விற்பனை அதிகரித்து  வருகின்றன.

குறிப்பாக  வெள்ளரிப்பழம் வாழைப்பழம் மாம்பழம் திராட்சைப்பழம் கொய்யாப்பழம் பலாப்பழம் பப்பாசி  மாதுளம்பழங்கள் பழுதடைந்த நிலையிலும் பங்கஸ் தொற்று ஏற்பட்ட நிலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.இதனால் நுகர்வோர்கள் சுகாதார ரீதியாக பல்வேறு  பாதிப்புக்களை எதிர்கொள்வதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

கடந்த காலங்களில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்  திருமதி சகிலா இஸ்ஸதீன் ஆலோசனைக்கமைய மேற்படி சுகாதார வைத்திய அதிகாரி   பிரிவுகளில் திடீர் களப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும்   முறையற்ற வகையில் உணவு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் திடீர் களப்  பரிசோதனையின் போது ஹோட்டல்கள்  உணவகம்  மரக்கறி விற்பனை நிலையங்கள் மற்றும்  பழக்கடை போன்றனவும் சோதனைக்கு  உட்படுத்தப்பட்டன.

ஆனால் தற்போது   மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள் பொது சுகாதார பரிசோதகர்களின்   திடீர் பரிசோதனை தொய்வின் காரணமாக இவ்வாறு பழுதடைந்த பழ விற்பனை  அதிகரித்தள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்