Sunday, February 8, 2026
Your AD Here

அரச மாளிகையும், சிறைச்சாலையும் ஒன்றுதான்..!நாமல் ராஜபக்ஷ

எனக்கு அரச மாளிகையும், சிறைச்சாலையும் ஒன்றுதான் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
நாம் வேலைகளை செய்து ஆட்சிக்கு வந்தவர்கள், மாறாகப் பொய்யுரைத்து அரியணையேறவில்லை. ஆனால், பொய்களால் எம்மை வீழ்த்தினார்கள். மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு நாம் பொய்யுரைக்கவில்லை.

அரசியல் பழிவாங்கல்களிலும் ஈடுபடவில்லை. கொள்கை அடிப்படையிலான அரசியலையே முன்னெடுத்து வருகின்றோம். 2018ஆம் ஆண்டு நாம் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வென்றபோது மத்திய அரசின் பலம் எம் வசம் இருக்கவில்லை.

ஆனால், மத்தியில் அதிகாரம் இல்லை என நாம் திணறவில்லை. சேவைகளை உரிய வகையில் முன்னெடுத்தோம். ஜனாதிபதி அநுர தற்போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் போல் செயல்படுகின்றார்.

எனக்குச் சிறைக்கு செல்வது பிரச்சினை இல்லை. சிறைச்சாலையும் ஒன்றுதான், அரச மாளிகையும் ஒன்றுதான். எம் மீது சேறுபூசுவதால் மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை. பொருளாதாரமும் மேம்படப்போவதில்லை என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்