யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான நிதி மோசடி வழக்கு மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அவர்களைப் பிணைகளில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (04) உத்தரவிட்டுள்ளது.
யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரெஸ்ட் ஆகிய இருவரும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ஆதித்ய பட்டபெதிகே முன்னிலையில் இன்று கையளிக்கப்பட்டது.
இந்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.