Tuesday, September 9, 2025
Your AD Here

காரைதீவில் 7 மாணவர்களுக்கு 9 ஏ.

காரைதீவில் 7 மாணவர்களுக்கு 9 ஏ.!…2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் காரைதீவு சார்பாக 7 மாணவர்கள் 9 ஏ பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

காரைதீவு இ.கி.ச .பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த ஆறு மாணவிகள் காரைதீவு பாடசாலைகளில் அதிகூடிய 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

J.சதுஸிகா, P.சபித்தா, S.ஹருஸ்ஸியா, S.மோபிகா, U.லோவித்யா,Y. விசாலி ஆகிய ஆறு மாணவிகளே 9ஏ பெற்றவர்கள் ஆவர்.

காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் S.றவீன் என்ற மாணவன் மாத்திரம் 9 ஏ சித்தி பெற்றுள்ளார்.

இதைவிட வேறெந்த பாடசாலைகளிலும் 9 ஏ சித்தி பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2023 இல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி காரைதீவு பிரதேச பாடசாலைகளில் மொத்தமாக 20 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றிருந்தனர்.

காரைதீவு இ.கி.ச. பெண்கள் பாடசாலையில் 10 மாணவர்கள் 9 ஏ சித்தி பெற்று சாதனை படைத்திருந்தனர்.

விபுலானந்த மத்திய கல்லூரியில் 9 மாணவர்களும், சண்முகா மகா வித்தியாலயத்தில் 1 மாணவர்களும் 9 ஏ சித்தி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்