பாதுகாப்பதற்கான திட்டத்தை ஆரம்பித்துள்ள ஆய்வாளர்கள்
உலகின் மிகவும் அழகான நத்தை இனங்களை பாதுகாப்பதற்கான திட்டத்தை ஆய்வாளர்கள் ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் அவற்றின் வாழ்வியல் இரகசியங்களை உலகிற்கு வெளியிடவும் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கிழக்கு கியூபா காடுகளை தமது பிறப்பிடமாக கொண்ட Polymita tree என்ற நத்தை இனம் அழிவடைந்து வரும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.
மிகவும் துடிப்பான, வண்ணங்கள் நிறைந்த மற்றும் தனிச்சிறப்புக் கொண்ட வடிங்களுடன் குறித்த நத்தை இனம் காட்சியளிக்கிறது. துரதிஷ்டவசமாக குறித்த வண்ணங்களும் வடிவங்களும் நிறைந்த நத்தையின் ஓடுகளை சேகரிப்பது அதிகரித்துள்ளது.
அத்துடன் குறித்த ஓடுகள் வர்த்தக நோக்கத்திற்காக பெறப்படுவதால் அவற்றின் எண்ணிக்கை வேகமாக குறைவடைந்து வருவதாக வனத்துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில் கியூபாவைச் சேர்ந்த உயிரியல் ஆய்வாளர்கள் மற்றும் பிரித்தானியாவின் நொட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் இணைந்து Polymita tree என அறியப்படும் 6 வகை நத்தை இனங்களை பாதுகாக்கும் செயற்த்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.




