கடந்த நாட்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகப் பாதிப்புற்றிருந்த மாவீரர் பெற்றோர்களுக்கு புலம்பெயர் உறவுகளின் நிதிப் பங்களிப்பில் உலர் உணவுப் பொதிகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.
சமூக செயற்பாட்டாளர் பாஸ்கரனின் ஏற்பாட்டில் மாவடிவேம்பு, கிரான் மற்றும் கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 25 குடும்பங்களுக்கு இன்றைய தினம் இவ்வுதவி வழங்கப்பட்டிருந்தது.
தமிழ் மக்களின் மீட்சிக்கான போராட்டத்திற்கு தங்கள் பிள்ளைகளைக் களம் அனுப்பிய நிலையில் மிகவும் கஸ்டத்தின் மத்தியி வாழ்ந்து வந்த குடும்பங்கள் இவ்வெள்ள அனர்த்தம் காரணமாக மேலும் கஸ்டத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் புலம்பெயர் அமைப்புகளினால் இவ்வுதவி பெற்றுக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











