தமிழர்கள் பிரிவினை கோரவில்லை, மாறாக தங்களின் அடிப்படை உரிமைகளை மட்டுமே கோருகின்றனர் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று (03) யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், இலங்கைத் தமிழரசுக் கட்சி பிரிவினையை விரும்பவில்லை என்றும், பிரிவினையைக் கோரவில்லை என்றும் வலியுறுத்தினார். இது குறித்து ஜனாதிபதியை சந்தித்து பேச விரைவில் கோரிக்கை விடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மாகாண சபைத் தேர்தல்களை தாமதமின்றி நடத்துமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.