மித்தெனியாவில் அண்மையில் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பு இரசாயனப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, கந்தானயில் மேலும் ஒரு தொகுதி இரசாயனப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கந்தானை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தேடுதல் நடவடிக்கையின் போது இந்த இரசாயனப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கைப்பற்றலுக்கும் மித்தெனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருட்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.