தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பெப்ரவரி 12ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்படி, இம்மனுக்கள் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.
கர்தினால் அதிஉயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இளம் ஊடகவியலாளர் சங்கம் உள்ளிட்ட தரப்பினரால் 09 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.