Monday, September 8, 2025
Your AD Here

கிளப் வசந்தவின் மனைவியின் நிலைமை கவலைக்கிடம்!

அத்துருகிரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் உயிரிழந்த சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் கிளப் வசந்தவின் மனைவி நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென களுபோவில வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கிளப் வசந்தவின் மனைவிக்கு இனந்தெரியாத நபர் மலர் வலையம் ஒன்றை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து வைத்தியசாலையை சுற்றி விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டின் போது எட்டு தோட்டாக்கள் அவரது உடலில் பாய்ந்துள்ளதாகவும், அவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு, இதுவரை 3 சத்திர சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த கிளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதன்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மனைவி பங்கேற்பார் என குடும்பத்தினர் எதிர்பார்த்திருந்தனர்.

எனினும் அவரின் உடல்நிலை மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளமையால் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்