Monday, September 8, 2025
Your AD Here

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு!

தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது! -தேர்தல்கள் ஆணைக்குழு.18 வயதைப் பூர்த்தி செய்த அனைவருக்கும் தேர்தலில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் 2024 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் பிரகாரம் 1 கோடியே 71 லட்சத்து 40 ஆயிரம் பேர் இதுவரை வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம் .எல். ஏ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் ”தேர்தல் கடமைகளுக்கு பயன்படுத்தப்படும் மத்திய நிலையங்கள் தொடர்பாக அரச அச்சகம், பொலிஸ் திணைக்களம், தபால் மா அதிபர் உள்ளிட்ட தரப்பினருடன் தாம் கலந்துரையாடிவருவதாகவும், நாளை நிதியமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தேவைப்படுகின்றது. இவை அனைத்தையும் கருத்திற்கொண்டே திகதி தீர்மானிக்கப்படும்.

இந்த மாதம் நிறைவடைவதற்குள் தேர்தல் நடத்தப்படும் திகதியை நாம் அறிவிப்போம். தேர்தல் திகதியை தீர்மானிப்பதற்கு வேறு எந்த இடையூறுகளும் இல்லை. தேர்தல் திகதியை தீர்மானிப்பதில் நாம் பாரபட்சமாக செயற்படவில்லை. அரசியலமைப்பின் பிரகாரமே செயற்படுவோம்.செப்டெம்பர் 17 ஆம் திகதியின் பின்னர் பொருத்தமான ஒருநாளில் தேர்தல் நடத்தப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் இன்று நள்ளிரவுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெறுகின்ற நிலையிலேயே இன்றைய தினம் குறித்த விசேட ஊடக சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்