Tuesday, April 7, 2026
Your AD Here

அதிகளவான கஞ்சாவுடன் ஒருவர் கைது !

ராகம பகுதியில் 271 கிலோகிராம் 835 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்