Tuesday, November 17, 2026
Your AD Here

வெலிக்கடை சிறைச்சாலையில் விசாரணைகளுக்குத் தடையா? – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தனது அதிகாரிகள் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைவதற்கு ஜூலை 7, 2026 அன்று அனுமதி மறுக்கப்பட்டமை குறித்து கடும் கவலையை வெளியிட்டுள்ளது.

இது, சிறைச்சாலைகள் போன்ற தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு எவ்வித முன்னறிவிப்புமின்றி எந்நேரத்திலும் நுழைய ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கும் 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தை மீறும் செயலாகும் என்று அது விவரித்துள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனிய தலைமையில் ஜூலை 14, 2026 அன்று நடைபெற்ற கூட்டத்தில், சிறைச்சாலைக்குள் நிலவிய பாதுகாப்பற்ற சூழல் காரணமாகவே அனுமதி மறுக்கப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகள் இந்தச் சூழ்நிலை குறித்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கத் தவறியமைக்காக வருத்தம் தெரிவித்ததோடு, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என உறுதியளித்த போதிலும், அவர்கள் வழங்கிய விளக்கத்தில் ஆணைக்குழு திருப்தியடையவில்லை என்று தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து மாற்றப்பட்ட கைதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பழிவாங்கல்கள், சித்திரவதைகள், மருத்துவ சிகிச்சை மறுப்பு, கைதிகளின் இருப்பிடம் குறித்து குடும்பத்தினருக்குத் தெரிவிப்பதில் ஏற்படும் தாமதம் மற்றும் தண்டனைக் காலம் முடிவடைந்தும் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தொடர்பாகவும் ஆணைக்குழு தனது கவலையை எழுப்பியுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் மரணங்கள், சித்திரவதைகள் மற்றும் தவறான நடத்தைகள் குறித்த விசாரணைகளுக்கு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று ஆணைக்குழு பணித்துள்ளது.

மேலும், சிறைச்சாலைகள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்குள் சட்டப்பூர்வமாக நுழைவதற்கான ஆணைக்குழுவின் அதிகாரத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டு அதற்கு வசதி செய்து தருமாறும், மாற்றப்பட்ட கைதிகளுக்கு எதிரான பழிவாங்கல்களைத் தடுக்குமாறும், கைதிகளின் இருப்பிடம் குறித்து குடும்பத்தினருக்கு உடனடியாக அறிவிக்குமாறும், தண்டனை காலம் முடிவடைந்த கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதை உறுதி செய்யுமாறும் ஆணைக்குழு சிறைச்சாலை அதிகாரிகளுக்குப் பரிந்துரைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்