கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்கு உட்பட பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் மல்லுக்கட்டி, அவரின் துப்பாக்கியைப் பறித்து, மற்றொரு அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளான்.
நேற்று (15) மாலை 3.50 மணியளவில், போதைப்பொருள் வியாபாரி ஒருவரைக் கைது செய்வதற்காகக் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகள் சென்றிருந்தனர்.
அங்கு அவர்களுக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது, குறித்த வியாபாரி பொலிஸ் அதிகாரியின் கைத்துப்பாக்கியைப் ப*றித்து அவர் மீது சூடு நடத்தியுள்ளார்.
இதனையடுத்து, அருகிலிருந்த வீதித் தடையின் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்த போதிலும், அதற்குள் அந்தப் போதைப்பொருள் வியாபாரி தப்பியோடியுள்ளார்.
பின்னர், நீர்கொழும்பு பிராந்திய குற்றவியல் பணியகத்தின் அதிகாரிகள் குழுவொன்றினால் #திவுலபிட்டிய பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து 31 கிராம் ‘ஐஸ்’ போ*தைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தேகநபரின் வசம் இருந்த பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியும், கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் ஆவார்.
இவர் 2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை சிவில் பாதுகாப்புப் படையின் கட்டுநாயக்க நகரப் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றியவர் என்பதை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி மீனுவாங்கொட ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.





