எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.
இதுகுறித்த தகவலை தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கு, நாட்டின் இயற்கை வளங்களைப் பயன்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
