நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நீண்டகாலமாக உள்ள மோசமான அரசியல் கலாசாரத்தை கருத்திற் கொண்டே தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் விஜயதாஸ ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே அறிவித்திருந்த நிலையிலேயே, விஜயதாஸ ராஜபக்ஷ இவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.