இலங்கையின் 9ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்குறித்த வர்த்தமானி தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் கையொப்பத்துடன் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் 15ஆம் திகதி கோரப்படவுள்ளதுடன் குறித்த தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று முதல் செலுத்த முடியும் எனவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.