Sunday, February 8, 2026
Your AD Here

வருடாந்த இடமாற்றம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒன்றிணைந்த சேவையாளர் சுற்றுநிரூபத்தினூடாக 2025ஆம் ஆண்டுக்கான அதிகாரிகளின் வருடாந்த இடமாற்ற அறிவிப்பு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த சுற்றுநிரூபம் நடைமுறைப்படுத்தப்படுவதால் ஜனாதிபதித் தேர்தலுக்கு அது எந்தவித தாக்கத்தையும் செலுத்தாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்