தேர்தல்கள் ஆணைக்குழு தற்சமயம் அவசரமாக ஒன்று கூட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி மற்றும் நலன்புரி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எட்டும் நோக்கில் இந்தச் சந்திப்பு இடம்பெறுகிறது.
அரசாங்கத்தினால் அபிவிருத்தி மற்றும் நலன்புரி வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அஸ்வெசும, காணி உறுதிப்பத்திரம் வழங்கல், ஜனாதிபதி புலமைப்பரிசில் மற்றும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அரச சொத்துக்களைப் பயன்படுத்துகின்றமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.