மாதாந்த எரிபொருள் விலைத்திருத்தத்திற்கு ஏற்ப எரிபொருள் விலை மாற்றமின்றி தொடரும் என சினோபெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைவாக ஜூலை மாதத்தில் நிலவிய அதே விலையில், ஒகஸ்ட் மாதமும் எரிபொருள் விற்பனை செய்யப்படும் என சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 344 ரூபாயாகும்.
95 ரகப் பெற்றோல் லீற்றரின் விலை 379 ரூபாயாகும்.
லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 355 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை ஓட்டோ டீசல் லீற்றர் 314 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என சினோபெக் நிறுவனம் அறிவித்துள்ளது.