Wednesday, September 10, 2025
Your AD Here

தேர்தல் சட்ட மீறலை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கையின் போது அரச அதிகாரிகளால், தேர்தல் சட்டம் மீறப்படுமாயின் அது தொடர்பில் முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைவாக 076-7914696 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 011-2505566 என்ற தொலைநகல் இலக்கத்திற்கோ முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அண்மையில் வழிகாட்டல்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்