அனைத்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்று அளிக்கப்பட்டுள்ள குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பல்வேறு அம்சங்கள்குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளுடனான சந்திப்பொன்றும் இன்று பிற்பகல் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.