இந்தியாவின் பிரபல ஜோதிடராக அறியப்படும் குஷால் குமார். இந்தியாவின் நாஸ்ட்ரடாமஸ் என அறியப்படுபவர். இதற்கு முன் ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரை கணித்தவர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போரையும் முன்கூட்டியே அறிவித்தவர்.
இந்த நிலையில், 3-ம் உலக போர் தொடக்கம் பற்றிய தேதியை குஷால் அறிவித்துள்ளார். அவருடைய கணிப்பின்படி, இந்த போர் இன்று அல்லது நாளை தொடங்கும் ஆகஸ்டு 4 அல்லது ஆகஸ்டு 5 ஆகிய இரு தேதிகளில் போர் தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவருடைய கணிப்பின்படி, அந்த நாள் இன்று தொடங்குகிறது.இதற்கு முன்பும் அவர் பல முறை 3-ம் உலக போர் தொடங்கும் திகதியை அறிவித்துள்ளார். இதன்படி, தற்போதைய ஆண்டின் ஜூன் 18-ந் திகதி போர் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
ஆனால், அன்று எதுவும் நடக்கவில்லை. இதன்பின், புதிய திகதியை அறிவித்த அவர் ஜூலை 26 அல்லது ஜூலை 28 ஆகிய நாட்களில் ஏதேனும் ஒரு திகதியில் 3-ம் உலக போர் தொடங்கும் என கணிப்பு வெளியிட்டார்.
ஆனால், அதுவும் தவறாகி போனது இஸ்ரேல் மீது போரை தொடுக்க ஈரான் தலைவர் அலி காமினி உத்தரவிட்டு சில தினங்கள் ஆன நிலையில், பிரபல ஜோதிடரின் 3-ம் உலக போர் பற்றிய அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.