இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவுக்கு இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொஷி ஹிதேகி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கும், இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துவதில் அநுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து பணியாற்ற தான் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் தமது தலைவரைத் தெரிவு செய்வதில் இலங்கையின் ஜனநாயக செயற்பாட்டில் தீவிரமாக பங்குபற்றியமைக்காகவும் தாம் வாழ்த்த விரும்புவதாகவும் ஜப்பான் தூதுவர் தனது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.