Sunday, February 8, 2026
Your AD Here

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக இருக்க விருப்பமில்லை என தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளருக்கு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது .

இந்தநிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் எனவும் SLPP வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிக்கப்படவுள்ள பின்னணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பத்தரமுல்லை, நெலும் மாவத்தை கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று காலை அறிவிக்கப்படுவார் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் அரசியல் குழு உறுப்பினர்கள் இன்று காலை 7 மணிக்குக் கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்